தமிழக நீச்சல் வீரர் அக்னீஸ்வர்க்கு அரசு ரூ. 1 லட்சம்
சென்னை: ஆசிய நீச்சல் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அக்னீஸ்வர்க்கு ரூ. 1 லட்சம் ஊக்கப்பரிசு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஜெ.அக்னீஸ்வர் உலக அளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை மொத்தம் 126 தங்கப் பதக்கங்களும், 49 வெள்ளிப் பதக்கங்களும், 28 வெண்கலப் பதக்கங்களும் பெற்று மகத்தான சாதனைகள் படைத்துத் தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் மட்டும் 6 தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளார் என்பது இவரது பெருமைக்குச் சான்றாகும். அண்மையில், இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்ற ஐந்தாவது ஆசிய நீச்சல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கம் பரிசு பெற்றுள்ளார்.
அவரது இந்த சாதனையையும், நீச்சல் போட்டிகளில் இதுவரை அவர் படைத்துள்ள சாதனைகளையும் பாராட்டும் முகத்தான் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் ஊக்கப் பரிசு வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications