விலைவாசி-முதல்வரிடம் கம்யூ. தலைவர்கள் முறையீடு
சென்னை: விலைவாசி உயர்வைத் தடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க மத்திய அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், எம்.பி. டி.கே.ரங்கராஜன், எம்.எல்.ஏ பாலபாரதி ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து இது தொடர்பாக விவாதித்தனர்.
அப்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து முதல்வருடன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேச்சு நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், மத்தியஅரசுடன் பேசி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும், அதற்கு மாற்று வழியைக் காணவும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என முதல்வரைக் கேட்டுக் கொண்டோம்.
விலைவாசி உயர்வு மற்றும் பிற விலை உயர்வைத் தவிர்க்க இடதுசாரிகள் கொடுத்த மாற்றுத்திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துமாறும் முதல்வரை கேட்டுக் கொண்டோம்.
இடதுசாரிகள் கொடுத்த திட்டத்தின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் விலைவாசி உயர்வு பெருமளவில் குறைந்திருக்கும். பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தையும் தவிர்த்திருக்கலாம்.
அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உடனடியாக குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் கோபத்திலிருந்து மத்திய அரசு தப்ப முடியாது என்றார் வரதராஜன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications