லாரி வாடகை 20% உயர்வு-விலைகள் உயரும்!
சென்னை: டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் சரக்கு லாரிகளின் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சரக்குக்கட்டணத்தை உயர்த்துவோம் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சம்மேளனம் அறிவித்திருந்தது.
இதையடுத்து டெல்லியில் பத்து சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் 20 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம், சத்திரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா கல்யாண மண்டபத்தில் நடந்தது. இதில், தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளனம், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம், சேலம் மாவட்ட லாரி புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் ஆகியவை கலந்துகொண்டன.
இக்கூட்டத்தில் லாரி வாடகைக் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செங்கோடன் கூறுகையில், ஏற்கனவே நஷ்டத்தில்தான் தொழில் நடத்தி வருகிறோம். உதிரிபாகங்களுக்கான விலை உயர்வு, ஊழியர்களின் சம்பளம், டயர் விலை உயர்வு போன்றவற்றையும் உரிமையாளர்களே ஏற்க வேண்டி இருந்தது.
நிலைமையை எப்படி சமாளிப்பது என்று எண்ணுவதற்குள் மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தி விட்டது.
இன்றைய கூட்டத்தில், லாரி வாடகைக் கட்டணத்தை 20 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.. வியாழக்கிழமை முதல்கட்டணஉயர்வு அமலுக்கு வருகிறது.
தற்போது கிலோமீட்டருக்கு ரூ.14 கட்டணமாக வசூலிக்கிறோம். இது ரூ. 18 ஆக உயரும் என்றார் செங்கோடன்.
லாரி வாடகைக் கட்டணம் உயர்வு காரணமாக காய்கறி விலைதான் கடுமையாக உயரும் ஆபத்து உள்ளது. மேலும், பிற உணவுப் பண்டங்கள், ஜவுளிகள் உள்ளிட்டவற்றின் விலையும் கடுமையாக உயரக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications