'தம்பி, தவம் கலைக்க வருவார்கள்.. அடிபணியாதே'- கருணாநிதி

விழாவில் கருணாநிதி உரையாற்றுகையில், புதிய சட்டப் பேரவை கட்டடத்தை ரூ. 200 கோடி அளவில் அமைக்கிறோம். இதை யார் யார் பாராட்டுவார்கள், யார் யார் விமர்சிப்பார்கள் என்பதை நான் அறிவேன்.
இந்த நேரத்தில் ரூ. 200 கோடி செலவில் இது தேவையா என்ற கேள்வியும் வரலாம். 2 ஆண்டு ஆட்சியில் வேறு எந்தப் பணியையும் செய்யாமல் இதற்கு ரூ.200 கோடியை செலவழிக்கவில்லை.
ராமநாதபுரத்தில் ரூ. 616 கோடி செலவில் கூட்டுக் குடிநீர்த்திட்டம். இந்த ஆண்டு முடியப் போகிறது. ரூ.1330 கோடிசெலவில் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தீட்டப்படுகிறது.
சென்னை கோட்டூர் புரத்தில் ரூ.100 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மாநில நூலகம் கட்டப்படவுள்ளது. புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6 தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளன. இதன் மூலம் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். அரவாணிகள் உட்பட 23 நலவாரியம் அமைத்துள்ளோம்.
சென்னை மெரீனா கடற்கரையை ரூ. 16 கோடியே 92 லட்சத்தில் எழிலூட்டும் பணி நடந்து வருகிறது. அடையாறு கடல் சங்கமிக்கும் இடத்தில் ரூ.100 கோடியில் அழகிய பூங்கா அமைக்கப்படுகிறது.
5 லட்சத்து 40 ஆயிரத்து 421ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 53 ஆயிரத்து 448 படித்த இளைஞர்களுக்கு 116 கோடியே 59 லட்சத்து 23 ஆயிரத்து 454 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
திருமண உதவித்திட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 332 பேருக்கு 193 கோடியே 99 லட்சத்து 85 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பணிகளுக்கு செலவிட்டுவிட்டுத்தான், அந்த திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பது பற்றி விவாதிக்கவும், குற்றம் குறைகளை எடுத்துச் சொல்லவும், அதை ஏற்று திருத்திக்கொள்ளவும், புதிய வசதிகளுடன் சட்டப் பேரவை கட்ட நிதி ஒதுக்கி இருக்கிறோம். பொது நலனுக்காகவே இந்தப் புதிய சட்டமன்றம் அமைக்கப்படுகிறது.
அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்த சட்டமன்றம் இனி நிரந்தரமாக இங்கு அமையவுள்ளது. நாங்கள் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கிறோம். இனியும் நடப்போம். நல்ல தலை வர்களின் தியாகம், பண்பாடு களை சிறப்பிக்கும் வகையிலும் பெருமைப்படுத்தும் வகையிலும் பணியாற்றுவோம்.
தமிழ்நாட்டில் இன்று கல்வித் துறை வளர்கிறது என்றால் அதற்கு காமராஜர்தான் காரணம். ஐந்தாவது முறையாக ஆட்சியமைத்திருக்கும் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ந்தேதி காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். இதை சட்டமாகவும் உருவாக்கியுள்ளோம்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் புதிய சட்டமன்ற கட்டுமான பணி நிறைவடையும். தவமிருந்து இந்தப் பணியை நிறைவேற்றுவோம் என்று தம்பி துரைமுருகன் கூறினார். தம்பி, தவத்தை கலைக்க யார் குறுக்கிட்டாலும் அடி பணியாதே, மயங்காதே, தவத்தைக் கலைக்க யார் யாரோ, எப்படி எப்படியோ வருவார்கள். தவம் கெடாமல் பார்த்து, பணியை நிறைவேற்ற சூளுரை ஏற்று செயல்படு என்றார் கருணாநிதி.
அமைச்சர் அன்பழகன் பேசுகையில், சுதந்திரத்தின் அடையாளம் ஜனநாயகம். ஜனநாயகத்தின் அடையாளம் சட்டமன்றம். கலாச்சாரம், பண்பாட்டு சின்னமாக இந்த சட்டமன்ற வளாகம் அமையும் என்றார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 60 ஆயிரம் சதுர மீட்டரில், ஏ பிளாக், 65 ஆயிரம் சதுர மீட்டரில் பி பிளாக் என இரு பெரிய கட்டடங்கள் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்றார்.
தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி நன்றி கூறினார். விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications