8 லட்சம் கேஸ் இணைப்புகள்-தமிழகம் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் இலவச அடுப்பு-கேஸ் இணைப்பு திட்டத்துக்காக, 8 லட்சம் கேஸ் இணைப்புகளை வழங்க வேண்டும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவிடம் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேலு நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக அவர் மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவாரை சந்தித்து தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் வினியோகிக்க கூடுதலாக கோதுமையை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந் நிலையில் முரளி தியோராவையும் அவர் சந்தித்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆணைப்படி, உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் முரளி தியோராவை மத்திய தகவல் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசவுடன் சென்று சந்தித்தார்.
தமிழகத்தில் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2008-2009ம் ஆண்டில் ஏழை, எளிய மக்களுக்கு 8 லட்சம் இணைப்புகள் வழங்க ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகத்துக்கு 8 லட்சம் கேஸ் இணைப்புகளை உடனடியாக வழங்குமாறு தியோராவிடம் வேலு வலியுறுத்தினார். இதுகுறித்து பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தியோரா தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications