போலி தங்கப் புதையலை விற்க முயன்ற 2 பேர் கைது

சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்தவர் சுனில். இவர் அப்பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கிஷோர் என்பவர் ஒரு வயதான பெண்ணுடன் 2 நாட்களுக்கு முன்பு வந்தனர். சுனிலிடம், ஒரு பையைக் காட்டினர். அதில் தங்கக் காசுகளும், சங்கிலிகளும் குவியலாக இருந்தன.
இவை அனைத்தும் புதையலில் கிடைத்ததாகவும், பல கோடி மதிப்புடையது என்றும், இதை வெளியில் எங்கும் விற்க முடியாது. நீங்கள் ரூ. 40 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த சுனில், அவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள், எப்படி கிடைத்தது இந்த நகை என்று விசாரித்துள்ளார். அதற்கு கிஷோர், நாங்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள். வீடு கட்ட குவி தோண்டியபோது இதுகிடைத்தது என்று கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் காட்டிய நகைகள் போலியானவை என்பதை சுனில் கண்டுபிடித்து விட்டார். இதையடுத்து நாளை காலை வாருங்கள் பணம் தருகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார். பிறகு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
நேற்று காலை இருவரும் மீண்டும் சுனிலிடம் வந்தனர். அப்போது காத்திருந்த போலீஸார் இருவரையும் வளைத்துப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில், மொத்தம் 9 கிலோ மதிப்புடைய போலி தங்கக் காசுகளும், தங்கச் சங்கிலிகளும் இருந்தன. அனைத்தும் பித்தளையில் ஆனவை, கவரிங்.
கைது செய்யப்பட்ட கிஷோர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர். அந்தப் பெண்ணின் பெயர் கெளரி பாய்.இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். சென்னை சென்டிரல் ரயில்நிலையத்தில் பூ விற்றுவருகிறார்.
ரயில் நிலையத்தில் அவரை சந்தித்த கிஷோர், தனது மோசடிச் செயலுக்கு உடந்தையாக இருக்குமாறுகூறி கூட்டி வந்து, அவரைத்தனது தாயார் என்று சுனிலிடம் கூறியுள்ளார்.
இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications