பெரியார் தி.கவை கண்டித்து போராட்டம்: பாஜக-இ.முன்னணியினர் கைது
சென்னை: பெரியார் தி.கவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தீ மிதிப்பது, அக்கினி சட்டி எடுப்பது, அலகு குத்துவது போன்றவற்றை கிண்டல் செய்யும் வகையில் பெரியார் தி.க. தொண்டர்கள் தீ மிதிக்க இருந்ததை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து இந்து முன்னணி, பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைதுக்கு பாஜகவும் இந்து முன்னணியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எந்த ஒரு மதத்தினரது உணர்வுகளையும் புண்படுத்துகிற வகையில் பேசுவதோ எழுதுவதோ சைகை காட்டுவதோ கூடாது என சட்டம் தெளிவாக சொல்லியிருக்கிற போதிலும் தொடர்ந்து இந்து மத உணர்வு பகிரங்கமாக பொது இடங்களில் புண்படுத்தப்பட்டு வருகிறது.
பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் நாத்திக விழா என்ற பெயரில் தீ மிதித்தல் போன்ற இந்து மத பழக்கங்களை விமர்சனம் செய்வதற்கு முனைந்துள்ளனர்.
காவல்துறையும் அவர்களது பொது கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கமே தடை செய்ய வேண்டிய ஒரு நிகழ்ச்சியை அரசாங்கமே அனுமதி கொடுத்த காரணத்தால், மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதில் பாஜக சார்பில் மாநிலத் துணைத் தலைவர் குமாரவேலு, தென் சென்னை மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
நாத்திக பிரசாரம் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நடைபெற்றாலும், ஆதரவு பெறவில்லை. தோல்வியே கண்டிருக்கிறது.
இத்தகைய முயற்சிக்கு துணை போவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார் கணேசன்.
ராம கோபாலன்:
இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெரியார் தி.கவினர் மூட நம்பிக்கையை ஒழிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு இந்துக்களின் பழக்கங்களான தீ மிதிப்பது, அக்கினி சட்டி எடுப்பது, அலகு குத்துவது போன்றவற்றை கிண்டல் பண்ணுகிற விதத்தில் சென்னை எம்.ஜி. ஆர். நகரில் தீ மிதிக்க இருந்தனர்.
அதை எதிர்த்து தங்களது மத உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முயற்சித்த இந்து முன்னணி தொண்டர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை












Click it and Unblock the Notifications