ஐந்தருவியில் பெண் காவலர்கள் 'மிஸ்ஸிங்'- குளிக்க தயங்கும் பெண்கள்
குற்றாலம்: குற்றாலம் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் ஆண் காவலர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பெண்கள் குளிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் சீசன் இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில் துவங்கினாலும் 10 தினங்களாக கண்ணாமூச்சி காட்டி வந்தது. இரவில் லேசான சாரலும் தண்ணீர் வரத்தும் அதிகரி்ப்பதும், விடிந்தால் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து போவதுமாக இருந்தது.
இதனால் வெளியூர்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்தது. இந் நிலையில் கடந்த இரு தினங்களாக நல்ல சாரல் மழை பெய்ததையடுத்து தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து பகலிலும் அதிகரித்துள்ளது.
மெயின் அருவியில் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் பரவலாக கொடுகிறது.
இதையடுத்து பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் போலீசாரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஐந்தருவியில் இரவு நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் ஆண் காவலர் தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பெரும்பாலான பெண்கள் குளிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications