சென்னையி்ல் விடிய விடிய ரெய்ட்- 129 ரெளடிகள் கைது
சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவில் போலீசார் விடிய விடிய ரெய்டுகள் நடத்தி 129 ரெளடிகளையும் தலைமறைவாக இருந்த 86 குற்றவாளிகளையும் கைது செய்ததனர்.
நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி மொத்த்தம் 1,500 பேரை கைது செய்தனர்.
இதில் 129 பேர் ரெளடிகள், 171 பேர் பழைய குற்றவாளிகள், 86 பேர் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவானவாக இருந்தவர்கள் ஆவர்.
வடசென்னையின் புதுவண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் பகுதிகளில் தான் இவர்களி்ல் பெரும்பாலானவர்கள் சிக்கினர்.
இணை கமிஷனர்கள் ரவி, பாலசுப்பிரமணியம், துரைராஜ் ஆகியோர் தலைமையில் இந்த சோதனைக் நடந்தன. இதை கமிஷனர் சேகரே நேரடியாக ஒருங்கிணைத்தார்.
மேலும் நள்ளிரவில் அவரும் போலீஸ் படையுடன் சோதனைகள் நடத்தினார். 500க்கும் மேற்பட்ட இடங்களில் 5,000 போலீசார் விடிய விடிய இரவு சோதனைகள் நடத்தினர்.
மேலும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற 260 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 320 பேரும், அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதாக 250 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மாதம் 31ம் தேதி கமிஷ்னராக பதவியேற்ற பின் சேகர் நடத்தியுள்ள மிகப் பெரிய அதிரடி ஆபரேசன் இதுவாகும்.
இந்த சோதனைகள் தொடரும் எனத் தெரிகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்












Click it and Unblock the Notifications