தூத்துக்குடி அருகே 10 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான சாகர் என்ற கப்பல் மணப்பாடு அருகே கடலில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு இலங்கையை சேர்ந்த 2 படகுகளில் 10 பேர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை கைது செய்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு நள்ளிரவு கொண்டு வந்தனர். இது தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 இடங்களில் கடலோர காவல் நிலையங்கள்:
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், குமரி மாவட்டத்தில் குளச்சல் மற்றும் ராமநாதபுரம், வேதாரண்யம், கடலூர் உள்ளிட்ட 12 இடங்களில் கடலோர காவல் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்தது.
ஆனால், தருவைகுளம், கூடங்குளம் உள்ளிட்ட 8 கடலோர காவல் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், முறையாக இயங்கவில்லை. இந் நிலையில் அனைத்து கடலோர காவல் நிலையங்களையும் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட எஸ்பிக்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலோர காவல் நிலையங்களுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் போலீசாரை நியமித்து அவர்கள் அனைவரையும் வரும் 16ம் தேதிக்குள் எஸ்.பி அலுவலகங்களில் தங்கள் பணியை ஏற்க வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம், தருவை குளம் கடலோர காவல் நிலையத்திற்கு முதற்கட்டமாக சப்-இன்ஸ்பெக்டர்கள் நீலகண்டன் தலைமையில் 5 ஏட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் கடலோர பாதுகாப்பு பயிற்சி பெற்ற 12 தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும் நியமிக்கப்பட உள்ளனர்.
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications