திமுகவுடன் 'டென்சன்'-பாமக வெற்றி பேரணி ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நடைபெறுவதாக இருந்த பாமகவின் வெற்றிப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடலூரில் நடக்கும் திமுக மகளிரணி மாநாடு காரணமாகவும், இரு கட்சிகளுக்கும் இடையே டென்சன் உச்சத்தில் இருப்பதாலும் இந்த முடிவை பாமக எடு்த்துள்ளது.

மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசின் முயற்சியால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.

இதைக் கொண்டாடும் வகையில் இன்று வெற்றிப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த பாமக திட்டமிட்டிருந்தது. ஆனால் திடீரென இந்தப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூரில் திமுகவின் மகளிரணி மாநாடு நடந்து வருகிறது. பாமக-திமுக இடையே முட்டல் மோதல்கள் தீவிரமாக இருக்கும் நிலையில் இரு தரப்பு தொண்டர்களும் ஒரே பகுதியில் குவிந்தால் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக பாமக தனது பேரணியை ஒத்தி வைத்துவிட்டதாகத் தெரிகிறது.

தவிர்க்க முடியாத சில காரணங்களால் பேரணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாமக தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+