கடலூர் மாநாடு- ஸ்டாலின் வருவாரா?

லண்டனுக்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் இன்னும் சென்னை திரும்பவில்லை. எனவே அவர் வருவாரா என்பது சந்தேகம்தான்.
அப்படி ஒருவேளை அவர் மாநாட்டுக்கு வராவிட்டால், அவர் பங்கேற்காத முதல் திமுக மாநில மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த புதிய சட்டசபைக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை என்பது நினைவிருக்கலாம்.
திமுகவில் அழகிரி-ஸ்டாலின் தரப்புக்கு இடையே மீண்டும் பனிப் போர் மூண்டுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. ஆட்சியில் மிக முக்கிய பதவியைப் பிடிக்க ஸ்டாலினும், கட்சியில் மிக முக்கிய பதவியைப் பிடிக்க அழகிரியும் முயன்று வருவதாக செய்திகள் வருகின்றன.
இந்த மோதலால் வேதனையடைந்ததால் தான் முதல்வர் கருணாநிதி தனது பிறந்த நாள் விழாவை ரத்து செய்தார் என்று கூறப்பட்டது. பின்னர் மூத்த தலைவர்களான அன்பழகன், ஆற்காடு வீராசாமியின் கோரிக்கைகளால் பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.
மேலும் பிறந்த நாளையொட்டி நடந்த கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அழகிரி, ஸ்டாலினுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும் என்று சஸ்பென்ஸ் மட்டும் வைத்துவிட்டு, நிறுத்திவிட்டார் முதல்வர் கருணாநிதி.
இந் நிலையில் கடலூர் திமுக மாநாட்டில் அழகிரியின் மகள் கயல்விழி நேரடியாக அரசியலில் குதிக்கிறார்.
இந் நிலையில் தான் ஸ்டாலின் வருவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.
-
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications