மதிமுக மண்டல மாநாடு-ஜெ வாழ்த்து
சென்னை: மதிமுகவின் சென்னை மண்டல இன்று மாலை 4 மணிக்கு தீவுத்திடலில் நடைபெறுகிறது.
மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு இன்று மாலை 4 மணிக்கு சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மண்டலத்தைச் சேர்ந்த மதிமுகவினர் பெரும் திரளாக குழுமி வருகின்றனர்.
மாநாட்டுக்கு முன்னதாக இன்று மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பிலிருந்து பிரமாண்ட தொண்டர் படை அணிவகுப்பு தொடங்குகிறது.
வாலாஜா சாலை, அண்ணாசாலை, மன்றோ சிலை வழியாக தீவுத் திடலை அணிவகுப்பு சென்றடைகிறது.
தீவுத்திடலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அணிவகுப்பை பார்வையிடுகிறார். மாநாட்டு நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்குத் தொடங்கும்.
ஜெயலலிதா வாழ்த்து:
மதிமுக சென்னை மண்டல மாநாட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு நடைபெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்தில் நிலவி வரும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கருணாநிதியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் பணியில் அதிமுகவோடு இணைந்து பணியாற்றும் மதிமுகவின் பணி மகத்தானது.
உலகின் கடைக்கோடியில் உள்ள தமிழனின் உரிமைகளையும் பாதுகாக்கும் லட்சியப் பயணத்தில் வெற்றிச் சரித்திரம் படைத்து நிற்கும் மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு வெற்றி பெற இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications