திருப்பதி- திருமலையிலும் விபச்சாரம்!
திருப்பதி: திருப்பதி, திருமலைப் பகுதியில் 20 முதல் 25 இடங்களில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதாகவும், 400க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்த கழகத்தின் இயக்குநர் சந்திரவதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமலைப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
விபச்சாரம் நடத்துவதற்கு வசதியாக 20 முதல் 25 இடங்களை மையம் போல அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
திருப்பதியில் 3,500 பாலியல் தொழிலாளர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொழிலாகவே அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இப்பகுதிகளுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், எய்ட்ஸ் பரவல் ஆபத்து அதிகமாக உள்ளது.
மேலும், தமிழகம் மற்றும் கர்நாடகத்திலிருந்து திருப்பதியில் வேலை பார்க்க வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் எய்ட்ஸ் பரவும் ஆபத்து உள்ளது.
மே மாதம் 7064 ஆண்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில், 268 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
புனித நகரான திருப்பதியை விபச்சார மையமாக மாற்றி வருவது அதிர்ச்சி தருகிறது என்றார் அவர்.
இந்தத் தகவல் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள டிவி சானல்களில் பெரிய அளவில் செய்திகள் ஒளிபரப்பி வருகின்றன.
இந்த நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கே.வி.ரமணா சாரி செய்தியாளர்களை அழைத்தார். அவருடன் சந்திரவதனும் இருந்தார்.
சந்திரவதன் கூறுகையில், நான் சொன்னதை மீடியாக்கள் தவறாக செய்தி வெளியிட்டு விட்டன. திருப்பதி தேவஸ்தானத்தை உஷார்படுத்தும் நோக்கில்தான் நான் அவ்வாறு கூறினேன் என்றார்.
ஆனால் சந்திரவதன் பேட்டியில் கூறியதை நிருபர்கள் சுட்டிக்காட்டியபோது, அவர் பதில் பேசாமல் எழுந்து போய் விட்டார்.
பின்னர் சாரியிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியபோது, திருமலையில் விபச்சார மையம் எதுவும் இல்லை. பயணிகள் போல வருபவர்கள் சிலர் இதுபோல நடந்திருக்கலாம் என்று மட்டும் பதிலளித்து விட்டு கிளம்பி விட்டார்.
இருப்பினும் திருப்பதியிலும், திருமலையிலும் விபச்சாரம் கொட்டி கட்டிப் பறப்பதாகவும், அதை கட்டுப்படுத்தாமல் தேவஸ்தானம் மெளனம் காத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications