கோவை டாக்டருக்கு ஐரோப்பிய மருத்துவ சங்க விருது
கோவை: கோவை ஜெம் மருத்துவமனை இயக்குநர் சி.பழனிவேலுவுக்கு ஐரோப்பிய எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கருத்தரங்கில் சமீபத்தில் விருது வழங்கப்பட்டது.
உணவுக் குழாயில் புற்றுநோய் பாதித்த பகுதியை லேப்ராஸ்கோபிக் முறையில் அகற்றும் சிகிச்சை குறித்த செயல் விளக்கத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பழனிவேலு கூறுகையில்,
உணவுக் குழாயில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்ற இதுவரை வழக்கமான அறுவைச் சிகிச்சை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இம்முறையில் அதிக வலி, நுரையீரல் பாதிப்பு மற்றும் பின் விளைவுகள் போன்ற பிரச்னைகள் இருந்து வருகின்றன.
தற்போது லேப்ராஸ்கோபிக் முறையில் இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்ய முடியும். இதன் மூலம் நோயாளி சிகிச்சை முடிந்து குறைந்த நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கினால் போதும்.
அண்மையில் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் கருத்தரங்கில் இச் சிகிச்சை முறை குறித்து வீடியோவில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இக் கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளும், விடியோ செயல் விளக்கங்களும் இடம் பெற்றன.
இதில் லேப்ராஸ்கோபிக் முறையில் உணவுக் குழாயில் புற்றுநோய் பாதித்த பகுதிகளை அகற்றும் சிகிச்சை முறைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தலைவர் ஆன்டனியோ எம்.லேசி இவ் விருதை வழங்கினார் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications