அணு ஒப்பந்தம்: பிடிவாதத்தை தளர்த்தும் காங்.!
டெல்லி: இடைத் தேர்தலை கூட்டணிக் கட்சிகளில் பலவுரம் விரும்பாததால், அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் தனது நிலையை தளர்த்திக் கொண்டுள்ளது காங்கிரஸ். இடதுசாரிகளின் ஆதரவும் தேவை என தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், ஒரு பிரச்சினையை மட்டும் மையமாக வைத்து இந்த அரசு இயங்கவில்லை. அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால் அது அரசுக்கு தோல்வி என கருத முடியாது.
இப்போதைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் சம்மதத்துடன்தான் இந்த ஒப்பந்தத்ைத மேற்கொள்ளப்படும். எதிர்காலத்திலும், இடதுசாரிகளின் ஒப்புதலுடன்தான் அனைத்து முடிவுகளையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எடுக்கும் என்றார் அகமது.
இடதுசாரிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உறுதியாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு நேர் மாறாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ள கருத்து, அதன் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தெளிவுபடுத்துகிறது.
இடைத் தேர்தலை கூட்டணிக் கட்சிகள் பலவும் விரும்பாததே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.
எனவே வருகிற 25ம் தேதி நடைபெறும் ஒருங்கிணைப்புக்கூட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் ஒப்புதல் தராவிட்டால் அதை காங்கிரஸும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் நிராகரிக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் பண வீக்கத்தையும் விலைவாசியும் குறைக்கும் வேலைகளில் மன்மோகன் சிங் கவனம் செலுத்த வேண்டும், அணு ஒப்பந்த விவகாரத்தை கிடப்பில் போடலாம் என பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் காங்கிரசிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டன.
அணு ஒப்பந்த விஷயத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவாகவே முக்கிய கூட்டணிக் கட்சிகள் இருப்பதால் காங்கிரஸ் வேறு வழியில்லாமல் இறங்கி வர ஆரம்பித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications