'சேது' புனித பயணத்தில் வெற்றி பெறுவேன்: பாலு

தேசிய நண்பர்கள் பேரவை சார்பில் எழுத்தாளர் ஆ.கோபண்ணா எழுதிய சேது சமுத்திர திட்டம் ஏன்? எதற்காக? என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர், சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடந்தது.
விழாவுக்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு புத்தகத்தை வெளியிட்டார். அதனை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம் எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார்.
அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ.ராமசாமி புத்தகத்தை திறனாய்வு செய்து பேசினார். புத்தகத்தின் ஆசிரியர் ஆ.கோபண்ணா ஏற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு பேசுகையில், மதுரையில் 2005-ம் ஆண்டு சேது சமுத்திர திட்ட தொடக்கவிழா நடைபெற்றது. அந்த விழா முடிந்த உடன் சோனியாகாந்தி என்னிடம், இந்த திட்டத்தை விரைந்து அடுத்த தேர்தலுக்குள் முடித்து விடுங்கள் என்றார். அந்த கடமையை இதுவரை செய்ய முடியவில்லையே என்ற தவிப்பும், ஆதங்கமும் என் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிகிறது.
சேது சமுத்திர திட்டத்தை பொறுத்தவரை நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. கடைசி வரை போராடுவேன். போராடி வெற்றி பெறுவேன்.
திட்டம் வரும்போது பிரச்சினை வரும். பிரச்சினை வரும்போது கவலைப்படாமல் புல்டோசர் போல போக வேண்டும். நான் வெட்ட வெட்ட துளிர்விடுவேன். அவர்கள் என் நிழலைத்தான் வெட்டுகிறார்கள். இது புனித பயணம். இதில் யாரும் குறுக்கிட முடியாது. அந்த பயணத்தில் வெற்றி பெறுவேன் என்றார் பாலு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications