திண்டிவனம் பாமக நகராட்சித் தலைவர் திமுகவுக்கு தாவல்!
சென்னை: திமுக, பாமக இடையிலான உறவு முறிவுக்குப் பின்னர், டாக்டர் ராமதாஸின் பேட்டையிலிருந்து முதல் பெரிய தாவல் நடந்துள்ளது. திண்டிவனம் நகராட்சித் தலைவராக இருக்கும் பாமகவின் பூபாலன், திமுகவில் இணைந்துள்ளார்.
திமுக, பாமக உறவு முறிவைத் தொடர்ந்து, வட மாவட்டங்களில் திமுக ஆதரவுடன் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக திமுகவினர் பெரும்பான்மையாக உள்ள அதேசமயம், தலைவர் பதவிகளில் அமர்ந்துள்ள பாமகவினர் திமுக பக்கம் சாய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாமகவிலிருந்து முதல் தாவல், டாக்டர் ராமதாஸின் கோட்டையான திண்டிவனத்திலிருந்து வந்துள்ளது. திண்டிவனம் நகராட்சித் தலைவர் பதவியில் தற்போது பாமகவைச் ேசர்ந்த பூபாலன் உள்ளார்.
நேற்று அவர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பூபாலன் பேசுகையில், நான் 30 வருடங்களாக திமுகவில்தான் இருந்தேன். கடந்த தேர்தலில்தான் பாமகவில் இணைந்தேன். இப்போது மீண்டும் நல்ல செய்ய திமுகவுக்குத் திரும்பியுள்ளேன்.
பாமக மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார் பூபாலன்.
திண்டிவனத்தில் தொடங்கியுள்ள இந்த தாவல் அடுத்தடுத்து தொடரும் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் பாமக வட்டாரம் கலங்கியுள்ளது.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின்












Click it and Unblock the Notifications