ஏஜென்ட் மோசடி: சவூதியில் 70 இந்திய தொழிலாளர்கள் தவிப்பு
துபாய்: மும்பை ஏஜென்ட்டால் ஏமாற்றப்பட்டு சவூதிக்கு அனுப்பப்பட்ட 70 இந்தியத் தொழிலாளர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த ஒரு ஏஜென்ட் இந்த தொழிலாளர்களிடம் தலா ரூ. 1 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ரியாத்தில், மாதம் ரூ. 10,000க்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அனுப்பி வைத்துள்ளார்.
சமையல்காரர், கேஷியர் உள்ளிட்ட வேலைகளில் நீங்கள் அமர்த்தப்படுவீர்கள் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரியாத் வந்து சேர்ந்த பின்னர் அங்குள்ள ஸ்பான்சர், மும்பையில் கூறியபடி நடக்காமல், மாதம் ரூ. 5000 சம்பளத்திற்கு அனைவரையும் வேலையில் சேர்த்து விட்டுள்ளார். அதுவும் உறுதியளித்த வேலை அல்ல.
மும்பையில் இந்தத் தொழிலாளர்கள் 2ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த ஒப்பந்தத்தில் மாதம் 8000 ஆயிரம் ரூபாய் சம்பளம் எனவும், சாப்பாட்டுப் படியாக ரூ. 2000 தரப்படும் என எழுதப்பட்டிருந்தது. ஆனால் இங்கு வந்த பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அனைவரும் உணர்ந்தனர்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனைவரும் தாங்கள் வேலை பார்க்க மாட்டோம், பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என ரியாத் ஸ்பான்சரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து 7 தொழிலாளர்களை சவூதியை விட்டு அனுப்பி விட்டார் ஸ்பான்சர். இதனால் அவர்கள் வேலையும் இல்லாமல், ரூ. 1 லட்சம் பணத்தையும் இழந்து நாடு திரும்பியுள்ளனர்.
இதனால் பயந்து போன மற்ற தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் கொடுத்த வேலையைச் செய்ய ஒப்புக் கொண்டு செய்து வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications