பள்ளி குறித்து அவதூறு: இந்திய போலீஸ்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
துபாய்: பஹ்ரைனில் உள்ள இந்தியப் பள்ளி குறித்து அவதூறான இமெயில்களை அனுப்பியது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் கைதாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த போலீஸ்காரர், பஹ்ரைனில் உள்ள ஒரு இந்தியப் பள்ளியின் நிர்வாகிகள் குறித்து அவதூறான இமெயில்களை, அந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ளர். அதில், பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மானபங்கப்படுத்தப்படுவதாகவும், பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாவதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து அந்தப் பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் கொடுத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கி அந்தப் போலீஸ்காரரரைக் கைது செய்துள்ளனர். அவர் தற்போது ஒரு வார கால சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications