வெட்கம், கூச்சம், பதட்டத்தை விலக்கும் ஹார்மோன்
லண்டன்: முற்றிலும் புதியவர்களைக் கண்டால் கூச்சம் வருகிறதா?, பார்ட்டிகளுக்குப் போக வெட்கமாக இருக்கிறதா?, காதலைச் சொல்ல தயக்கம் ஏற்படுகிறதா? கவலையை விடுங்கள். அத்தனையையும் போக்கும் வகையிலான ஹார்மோன் ஒன்றின் மீது விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ஆக்ஸிடாசின் என்பது இந்த ஹார்மோனின் பெயர். இந்த ஹார்மோனால் கூச்சம், வெட்கம், பதட்டம் போய் விடுமாம்.
இந்த ஹார்மோன் ஏற்கனவே வேறு சில வேலைகளையும் செய்து வருகிறது. கர்ப்பிணித் தாய்மார்களின் கருப்பையில் வளரும் சிசுவுக்கும், தாய்மாருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவது, பதட்டத்தைத் தணிப்பது, பயத்தைக் குறைப்பது ஆகியவற்றை இந்த ஹார்மோன் செய்து வருகிறதாம்.
இந்த நிலையில் ஆக்சிடாசின் ஹார்மோனைப் பயன்படுத்தி வெட்கம், கூச்சம் ஆகியவற்றை போக்க பயன்படுத்துவது குறித்த ஆய்வில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலிய நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஹார்மோனை வணிக ரீதியில் பயன்படுத்தும் வேலையிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனராம்.
இதுகுறித்து பேராசிரியர் பால் ஸாக் கூறுகையில், இந்த ஹார்மோனால் பதட்டம் தணியும். அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை உருவாகும். பயம் குறையும், கூச்சத்தன்மை நீங்கும். இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என்பது இந்த ஹார்மோனின் முக்கிய அம்சமாகும் என்றார்.
ஸாக் தலைமையிலான குழுதான், இங்கிலாந்தின் கிளார்மான்ட் பல்கலைக்கழகத்தில் இந்த ஹார்மோன் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான நோயாளிகளிடம் இக்குழு சோதனை நடத்தியுள்ளதாம்.
இதுதவிர, இரு பார்ட்னர்கள் உடலுறவில் ஈடுபட்ட பின்னர், அவர்களுக்கிடையே, அன்பை அதிகரிக்கும் வேலையையும் இந்த ஹார்மோன் செய்கிறதாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications