மகாதிரின் இனவாத பேச்சு-ஹிண்ட்ராப் கண்டனம்
கோலாலம்பூர்: தமிழ் இனவெறியர்கள் சேர்ந்துதான் இந்து உரிமைகளுக்கான நடவடிக்கை குழுவை (ஹிண்ட்ராப்) நிறுவியுள்ளனர் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது கூறியுள்ளதற்கு ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் உதயமூர்த்தி கடும் கண்டனம் ெதரிவித்துள்ளது.
மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது கடந்த வாரம் பிளாக் ஒன்றில், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலுவை கடுமையாக கண்டித்து எழுதியிருந்தார்.
அதில், என்ன இனவெறியர் என்று டத்தோ சாமிவேலுவும், ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான கர்பால் சிங், முன்னாள் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி பரம் குமாரசாமியும் கூறி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறும் சாமிவேலு கூறியுள்ளார். உண்மையில் ஹிண்ட்ராப் தலைவர்கள்தான் இன வெறியர்கள். தமிழ் இனவெறியர்களைக் கொண்ட அமைப்புதான் ஹிண்ட்ராப்.
இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகளின் நோக்கத்தையே இவர்களும் பிரதிபலிக்கிறார்கள். மலேசிய நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், முன்னாள் இங்கிலாந்து 'முதலாளிகளை' நம்பி அவர்களிடம் முறையிடுகிறார்கள்.
மலேசிய இந்தியர்களுக்காக ஹிண்ட்ராப் குரல் கொடுக்கவில்லை. மாறாக தமிழர்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
மகாதிரின் இந்தக் கருத்துக்கு ஹிண்ட்ராப் தலைவர் உதயமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதயமூர்த்தி தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது:
தனது 22 ஆண்டு கால கொடுங்கோல் ஆட்சியில் செய்த தவறுகளையெல்லாம் மறைக்க முயலுகிறார் மகாதிர் முகம்மது. அதன் ஒரு முகம்தான் இந்த இனவாத கருத்து.
மகாதிர் முகம்மது மேற்கொண்ட அதிகார துஷ்பிரயோகம், ஊழல், இனவெறி காரணமாகவே மலேசியாவில் பல்வேறு சிறுபான்மை சமூகத்தினர் ஒடுக்கப்பட்டனர். மலேசியாவில் நிலவி வந்த இன நல்லிணக்கத்ைத சீர்குலைத்தவரும் மகாதிர்தான் என்பது மலேசியர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
மகாதிரின் கருத்துக்களால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் ஆச்சரியப்படவில்லை. மலேசியாவின் நலனை விட தனது சொந்த நலனே முக்கியம் என்ற கொள்கையுடன் இருக்கிறார் மகாதிர்.
மலேசிய பூர்வீக இந்தியர்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் மகாதிர். ஆனால் அவரது பேச்சால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அவர் செய் தவறுகள் மறைந்து விடப் போவதில்லை.
பிரதமராக அவர் இருந்த காலத்தில், மலேசியாவைச் சேர்ந்த அனைத்து இனத்தவருக்கும் சம கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார, மத சுதந்திரத்தை ஏற்படுத்த தவறியவர் அவர். குறிப்பாக மலேசிய இந்தியர்களுக்கு எதிராக நடந்து கொண்டார்.
மலேசியாவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட பூர்வீக இந்தியர்களின் நலனுக்காகவே குரல் கொடுக்கிறது ஹிண்ட்ராப். இனம், மதம், மொழி, நிற வேறுபாடின்றி அனைத்து இந்தியர்களுக்கும் மலேசியாவில் சம உரிமை கிடைக்க வேண்டும் என்றே ஹிண்ட்ராப் பாடுபட்டு வருகிறது.
கடந்த கால மகாதிர் அரசிலும், தற்போதைய பிரதமர் படாவியின் அரசிலும், இந்தியர்களின் நலன் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. இந்திய மலேசியர்களின் குறைகளை சொகுசாக மறைத்து விட்டனர்.
ஆனால் இதையெல்லாம் பற்றி மகாதிர் கவலைப்படாமல், தனது தவறுகளை மறைக்கும் வகையிலேயே பேசிக் கொண்டிருப்பார் என்று
கூறியுள்ளார் உதயமூர்த்தி.
மலேசிய இந்திய காங்கிரஸ் கண்டனம்
இதற்கிடையே, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பழனிவேல் மகாதிரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஹிண்ட்ராப் குறித்து பேசுவதற்கு முன்பு தனது பூர்வீகம் குறித்து மகாதிர் முகம்மது அறிந்து கொள்ள வேண்டும். அவரது முன்னோர்கள் யார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
மகாதிர் முகம்மதுவின் தந்தை கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும், மலேசியாவுக்கு அவர் இடம் பெயர்ந்து வந்தவர் என்பதும், மலாய் இனப் பெண்மணியை அவர் திருமணம் செய்து கொண்டவர் என்பதும் நாடறிந்த உண்மை. ஆனால் மகாதிர்தான் இதை வசதியாக மறந்து விட்டார் என்று காட்டமாக கூறியுள்ளார்.
உதயமூர்த்தியின் சகோதரர்களான ஹிண்ட்ராப் நிர்வாகிகள் உதயக்குமார், கங்காதரன், மனோகரன், கணபதிராவ், வசந்தகுமார் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிக்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரஸ், ஹிண்ட்ராப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் தொடர்ந்து கோரி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications