அதிமுக- பாமக கூட்டணி?: ஜி.கே.மணி விளக்கம்
நாகர்கோவில்: அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
நாகர்கோவில் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மணி அளித்த பதில்களும்:
கேள்வி: அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே?
ஜி.கே.மணி: காங்கிரஸ் கூட்டணியில்நாங்கள் நீடிக்கிறோம். எனவே அதிமுகவுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி: வருங்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுமா?
ஜி.கே.மணி: இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
கேள்வி: காங்கிரஸ் கூட்டணியில் பாமக இருந்தாலும், தமிழகத்தில் திமுகதானே சீட் ஒதுக்கும்?
ஜி.கே.மணி: நாங்களாக திமுக அணியிலிருந்து விலகவில்லை. அவர்கள்தான் வெளியேற்றினார்கள். காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இருப்பதால், திமுகவிடம் நாங்கள் சீட் ஒதுக்கீடு குறித்துப் பேச மாட்டோம்.
கேள்வி: இதனால் மக்கள் குழம்ப மாட்டார்களா?
ஜி.கே.மணி: தேர்தல் வரும்போது மக்களின் குழப்பமெல்லாம் நீங்கி விடும் என்றார் மணி.
முன்னதாக ஜூலை மாதம் 9ம் தேதி நாகர்கோவிலில் பாமக சார்பில் நடைபெறவுள்ள மது ஒழிப்பு விழிப்புணர்வு மகளிர் மாநாடு தொடர்பாக நடந்த பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் மணி கலந்து கொண்டார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications