ராஜபாளையம் தலைமை ஆசிரியருக்கு சுற்றுச்சூழல் விருது
ராஜபாளையம்: சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் சிறப்பாக பணியாற்றிய ராஜபாளையத்தை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தமிழக அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.
கடந்த 2007ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் மாநில விருதுகள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் புதுக்கோட்டை தங்கசாமி, விருதுநகர் மனோகரன் சாமுவேல், சேலம் தேவிகா, பண்ருட்டி பசுபதி, தஞ்சாவூர் பாலசுப் பிரமணியன், மதுரை ராஜேந்திரன் உள்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோகரன் சாமுவேலுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் பணியாற்றியமைக்கு 2-வது பரிசாக சுற்றுச்சூழல் சுடரொளி விருதும், ரூ. 7500-க்கான காசோலையையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் சுற்றுச்சூழலுக்கான மாநில விருது பெற்ற ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மனோகரன் சாமுவேலுக்கு பாராட்டு விழாவும், விருது வழங்கிய தமிழக அரசுக்கு நுகர்வோர் கவுன்சில் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழாவும் ராஜபாளையத்தில் நடந்தது.
விழாவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் வரவேற்றுப் பேசினார். சுற்றுச் சூழல் மாசுபடுவது தொடர்பான நடைமுறை சட்டங்களும், பாதுகாப்பு முறைகளும் பாடத்தில் உருவாக்கப்பட வேண்டும். என்பதை விளக்கி விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் தலைவர் சேது ராமராஜா பேசினார்.
மேலும் ஆரம்பக் கல்வியில் நிலம், நீர், காற்று, ஒலி மாசுபடுதல் மாணவனுக்கு பயன்படும் விதத்தில் சொல்லப்படவில்லை. இதுகுறித்த நேரடி அறிவு மாணவனுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என விருது பெற்ற மனோகரன் சாமுவேல் கூறினார். நுகர்வோர் கிளப் ஒருங்கிணைப்பாளர் சரோஜா நன்றி கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications