கடும் பனிச்சரிவு: அமர்நாத் யாத்திரை ரத்து
ஜம்மு: கடும் நெரிசல், மழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக இந்த ஆண்டும் அமர்நாத் புனிதப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஏற்கெனவே 3 லட்சம் பயணிகள் அமர்நாத் பனி லிங்கக் கோயிலை நெருங்கிவிட்ட நிலையில் இப்பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம், பல்தால், ஜம்மு மற்றும் கந்தேர்பல் மாவட்ட முகாம்களில் பயணிகளின் நெரிசலால் மிக்க் கடுமையாக உள்ளதால், மேற்கொண்டு பயணிகளை வரவிடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அதிகாரிகள்.
பஹல்காமையும் பல்தாலையும் இணைக்கும் சங்கம் பகுதியில் பனிப் பாறைகள் சரிந்து வழியை அடைத்துக் கொண்டிருப்பதால் அதற்கு மேல் பயணம் செய்ய வழியில்லாமல் இருபக்கமும் பயணிகள் தவிக்கின்றனர்.
தற்போது வழியில் சிக்கிக் கொண்டுள்ள பயணிகளுக்கு எந்த ஆபததும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், பாதுகாப்புப் படை வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து தருகின்றனர்.
அமர்நாத் பனிலிங்கக் குகைக் கோயில் கடல்மட்டத்திலிருந்து 12,500 அடி உயரத்தில் அமைந்த்துள்ளது. சமயத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதிப்படக் கூடிய கடுமையான பனிப் பிரதேசமான மத்திய இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் குகைக் கோயிலுக்கு ஆண்டு தோறும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.
பனிப் பாறைகள் நிறைந்த இந்த கடுமையான பாதையில் கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுதான் இந்தக் கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications