'டாஸ்மாக்' பாரில் ரவுடி கொலை: 10 பேர் வெட்டி சாய்த்தனர்
சென்னை: சென்னையில் டாஸ்மாக் மது பாரில் பயங்கர ரவுடியை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. நகரின் மையப் பகுதியில் நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சூளைமேடு பஸ் நிலையம் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இத்துடன் பாரும் இணைந்துள்ளது. இங்கு நேற்று மாலை 10 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்தது.
அனைவரின் கையிலும் அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. உள்ளே நுழைந்த அக்கும்பல் மது அருந்திக் கொண்டிருந்த ஒரு வாலிபரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் அக்கும்பல் ஓடி விட்டது.
திடீரென நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. குடிமகன்கள் அலறி அடித்து ஓடினர்.
போலீஸார் விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொல்லப்பட்ட நபர் பெயர் ராஜேஷ். அப்பகுதியில் பயங்கர ரவுடி. ஆரம்பத்தில் பாரி தெருவில் வசித்து வந்தார். இவரது தந்தை டீக்கடை வைத்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு கிண்டி, கத்திப்பாரா சந்திப்பில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் முன்பு உதயா என்கிற ரவுடி வெட்டிக்கொல்லப்பட்டார். இதில் ராஜேஷ் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில்தான் அவர் விடுதலையானார்.
எனவே உதயா கொலைக்குப் பழிக்குப் பழியாக ராஜேஷை போட்டுத் தள்ளியிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications