கடையம்: கடையம் அருகே மணல் லாரி மோதி இரு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

கடையம்: கடையம் அருகே மணல் லாரி மோதி இரு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசலை சேர்ந்த சலீ்ம் மகன் அப்துல் அன்வர் அஜீஸ். இவரது நண்பர் சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்த ரஜாக் மகன் நூர் முகம்மது ரபீக். இவர்கள் இருவரும் சேரன்மகாதேவியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் 3ம் ஆண்டு சிவில் பிரிவில் படித்து வந்தனர்.

இந்நிலையில் பாலிடெக்னிக்கில் இருந்து இருவரும் பைக்கில் தென்காசிக்கு வந்தனர். கடையத்தை அடுத்துள்ள மாதாபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த மணல் அள்ள வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த லாரி பைக் மீது மோதியது.

இதில் அஜீஸ் மற்றும் ரபீக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். லாரியை ஓட்டி வந்த ஊட்டியை சேர்ந்த டிரைவர் மணி தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் விசாரணை நடத்தி தப்பியோடி டிரைவரை தேடி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+