மதுரையில் 2500 வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு!
மதுரை: மதுரையில் வக்கீல் ஒருவர் காவல் நிலையம் முன்பு தாக்கப்பட்டார். அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மதுரை வழக்கறிஞர்கள் 2500 பேரும் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.
மதுரையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர் செல்வம்.
இவர் சிந்தாமணி பஞ்சாயத்து தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
வழக்கறிஞர் செல்வம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, ஒரு வழக்கு சம்பந்தமாக கீரத்துரை காவல் நிலையத்திற்கு சென்று விட்டு திரும்பியுள்ளார்.
அப்போது காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த சிலர் செல்வத்தை பட்டாக் கத்தியால் தாக்கி விட்டு மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர்.
இதில் படு காயம் அடைந்த செல்வம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இச் சம்பவத்தில் போலீசாருக்கு குற்றவாளிகளை அடையாளம் தெரிந்திருந்தும் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், வழக்கறிஞர் செல்வம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்து நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் சுமார் 2500 வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications