அத்வானி பிரதமராகவே மாட்டார்-லாலு 'ஜோதிடம்'
அகமதாபாத்: பாஜக தலைவர் அத்வானிக்கு, நரேந்திர மோடி மீது பயம் வந்துவிட்டது. பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடியும் குதித்து விடுவாரோ என பயப்படுவதால் தான் இப்போதே தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டார் என ரயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், பரூச் அருகே நடந்த ரயில்வே விழாவில் அவர் பேசுகையி்ல்,
அத்வானி தான் அடுத்த பிரதமர் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். நான் ஒரு ஜோதிடன். கண்டிப்பாக ஒன்றை சொல்கிறேன். எந்தக் காலத்திலும் அத்வானி இந்த நாட்டின் பிரதமராக மாட்டார். அதற்கு வாய்ப்பே இல்லை.
அத்வானிக்கு, நரேந்திர மோடி மீது பயம் வந்துவிட்டது. பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடியும் குதித்து விடுவாரோ என பயப்படுகிறார்.
அதனால் தான் இப்போதே தன்னை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவித்து விட்டார்.
பாஜக ஆசைப்படுவது மாதிரி மக்களவைக்கு முன்கூட்டியே இடைத் தேர்தல் வராது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது முழு பதவிக் காலத்திலும் நீடிக்கும். அடுத்தும் ஆட்சிக்கு வரும்.
அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுக்கு விரைவில் சுமுகமான முறையில் தீர்க்கப்படும்.
ரயில்வே துறையின் வருவாய், எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். மதரஸாக்கள் மூலமாக பட்டம் பெற்றவர்களுக்கும் ரயில்வே பணிகளில் இனிமேல் வாய்ப்பளிக்கப்படும் என்றார் லாலு.












Click it and Unblock the Notifications