பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று மாலைக்குள் சரியாகும்: எல்.கே.திரிபாதி
சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நிலவி வரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று மாலைக்குள் சரியாகி விடும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் தலையீட்டீன் பேரில் எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று தலைமைச் செயலாளர் திரிபாதியை நேரில்சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திரிபாதி பேசுகையில், எண்ணை ஏற்றி வரும் கப்பல் வரத் தாமதம் ஆவதால்தான் தற்காலிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது 20 லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசலை விடுவிக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எனவே இன்று மாலைக்குள் நிலைமை சரியாகி விடும்.
அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் அனைத்து வகையான பெட்ரோல், டீசலை விற்க வேண்டும். குறிப்பிட்ட வகை பெட்ரோல், டீசலை மட்டுமே விற்போம் என்று யாரும் கூறக் கூடாது. அப்படி விற்பவர்கள் குறித்து அரசுக்குத் தகவல் தந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட வகை பெட்ரோலை மட்டுமே விற்றால் அந்த பெட்ரோல் நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்
என்றார்.
-
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications