கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பால் அவமானம்-பெண் தற்கொலை முயற்சி
திருவாரூர்: திருவாரூர் அருகே வயலில் மரம் வெட்டியவர்களை திட்டியதற்காக ஊர் பஞ்சாயத்து முன்பு ஒரு பெண்ணை முட்டி போட வைத்ததால் அப் பெண் வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கல்யாண மகாதேவி கிராமத்தை சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மனைவி மணிமேகலை (32).
இவர்களுக்கு சொந்தமான வயலில் உள்ள மரங்களை வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை செய்த சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மணிமேகலை அவர்களை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ஊர் தலைவர் கணேசனிடம் இது பற்றி புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால், இது குறித்து விசாரிக்க ஊர் பஞ்சாயத்து கூட்டம் அந்த ஊர் மரத்தடியில் கூட்டப்பட்டது. அப்போது, மணிமேகலை செயலுக்கு மரத்தடி கூட்டம் கண்டனம் தெரிவித்தோடு, அபராதமாக ரூ 20,000 கட்ட வேண்டும் அல்லது ஊர் மக்கள் முன்னிலையில் ஒரு நாள் முழுக்க முட்டி போட வேண்டும் என்று வினோத தீர்ப்பு கூறப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
இதனால் மனம் உடைந்த மணிமேகலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச் சம்பவம் குறித்து திருவாரூர் தாலுக்கா போலீசார் நடத்திய விசாரணையில் ஊர் மரத்தடி கூட்டம் நடத்தி மணிமேகலையை தற்கொலைக்கு தூண்டிய ஊர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், தேமுதிக ஒன்றிய இளைஞரணி செயலாளர் காசிநாதன் உள்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications