பெட்ரோல், டீசல் பற்றாக்குறை: அரசுக்கு தா.பண்டியன் கண்டனம்
தென்காசி: சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மக்கள் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், அதைப் போக்க அரசு நடவடிக்ைக எடுக்காமல் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி அருகே அச்சன்புதூர் சத்யா நகரில் 52 குடும்பத்தினர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.அவர்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதி பொதுமக்களை இந்திய கம்யூ மாநில பொது செயலாளர் தா.பாண்டியன், துணை பொது செயலாளர் மகேந்திரன் ஆகியோர் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், மக்களுக்கு வீட்டு மனை பட்டா கிடைக்க முதல்வரை சந்தித்து மனு கொடுப்போம்.
பெட்ரோல், டீசல் விநியோக முறையை அரசு முறைப்படுத்ததால் சில சுயநலவாதிகள் பதுக்கி செயற்கையாக பெட்ரோல்,டீசல் தட்டுபாட்டை ஏற்படுத்தியுள்ளனர். விலை உயர்த்தப்பட்டதில் இருந்து சாதாரண பெட்ரோல், டீசல் இல்லை என்று பொய் கூறுகின்றனர்.
உயர்ரக டீசல், உயர்ரக பெட்ரோல் வாங்க நிர்பந்தம் செய்கின்றனர். இப்போது டீசல், பெட்ரோல் தட்டுபாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளது. எனவே நெருக்கடி முற்றியுள்ளது. பெட்ரோல், டீசல தட்டுபாடு இல்லாமல் மக்களுக்கு விநியோகம் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டு முதல் 50 ஆண்டுகள் வரை குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இது சம்பந்தமாக முதல்வர் ஒரு குழு அமைத்து சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என ஆராய உத்தரவிட்டுள்ளார்.
அணுசக்தி உடன்பாட்டில் மத்திய அரசு கையெழுத்திட்ட மறுநொடியே நாங்கள் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம்.
விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் கோபம் அடைந்துள்ளனர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. எனவே ஆட்சியில் இருப்பவர்கள் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications