பஸ்-ரயில்கள் மூலம் காய்கறிகள்-பால் அனுப்ப கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
சென்னை: லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை அரசு பஸ்கள், ரயில் மூலம் அனுப்ப நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சரக்கு- டேங்கர் லாரிகள், வேன்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் காய்கறி, பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதிலும், வினியோகிப்பதிலும் சி்க்கல் உருவாகியுள்ளது.
இதனால் இந்தப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பொருட்களை வினியோகிக்க அரசு பஸ்களையும், ரயில்களையும் பயன்படுத்துமாறு அவர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நேற்று இரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக லாரி போக்குவரத்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய பொருள்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து கிடைத்திட தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
காய்கறி மற்றும் பால் போன்ற அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் மற்றும் ரயில் மூலமாகவும் கொணர ஏற்பாடுகளை செய்யுமாறும் அதற்கு தக்க பாதுகாப்பு கொடுக்குமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications