கச்சா எண்ணை: ஒரு பீப்பாய் 144 டாலர்!!
லண்டன்: கச்சா எண்ணையின் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாயின் விலை தற்போது 144 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் எண்ணை வாங்கும் நாடுகள் மேலும் கவலையில் மூழ்கியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் எண்ணை வாங்கும் நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெயின் விலை உயர்வால் பலநாடுகளில் பெட்ரோல்,டீசல் விலை கடுமையாகஉயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 144 டாலராக கிடுகிடுவென அதிகரித்தது. 2 நாட்களுக்கு முன்பு வரை இது 140 டாலராக இருந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததே இதற்குக் காரணம்.
கச்சா எண்ணையின் இந்த கிடுகிடு உயர்வால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலைகளுக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.
இந் நிலையில் பங்குச் சந்தைகளில் யூக வர்த்தகம் மூலம் விலை உயர்வதைக் கட்டுப்படுத்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறிய 'price band mechanism' திட்டத்தை ஏற்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அமைப்பான OPEC மறுத்துவிட்டது.
விலையை நிர்ணயிக்க பங்குச் சந்தையே சரியான இடம் என அந்த அமைப்பு கூறிவிட்டது.
மேலும் உயரும்:
இந் நிலையில் கச்சா எண்ணெயின் விலை இன்னும் சில வாரங்களில் பீப்பாய்க்கு 170 டாலரைத் தொடும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கூறியுள்ளன.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications