தடுப்பூசி போட்ட இரண்டரை மாத பெண் குழந்தை மரணம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தடுப்பூசி போடப்பட்ட பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பர்கூர் அருகே உள்ள சக்கிலிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மனைவிகள். 2வது மனைவியான ரத்னாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்தது.
இக்குழந்தைக்கு 2 நாட்களுக்கு முன்பு கப்பல்வாடி அரசுஆரம்ப சுகாதார மையத்தில் 2 தடுப்பூசிகள் போடப்பட்டன. பின்னர் ரத்னா வீட்டுக்குச் சென்றார்.
வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில் குழந்தைக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் வந்தால் கொடுக்க வேண்டும் என்று கூறி ஆரம்ப சுகாதார மையத்தில் மாத்திரைகள் கொடுத்திருந்தனர். அதை ரத்னா குழந்தைக்கு கொடுத்துள்ளார். ஆனால் உடனே பேதியாகி விட்டது.
இதையடுத்து குழந்தை உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக பர்கூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பின்னர் கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல கூறினர். அதன்படி குழந்தையை தூக்கிக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு பெற்றோர் ஓடினர்.
ஆனால் மருத்துவமனைக்குள் கொண்டு சென்றபோதே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. தடுப்பூசி காரணமாகத்தான் குழந்தை இறந்ததா அல்லது வேறு காரணமா என்பது குறித்து பரிசோதனையின் இறுதியில் தெரிய வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications