தனது கல்லூரி மாணவர்களுக்கு விஜய்காந்த் பணம் கட்டுவாரா?-பொன்முடி
விழுப்புரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடத்தும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அவரே பணம் கட்டுவாரா என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
விழுப்புரம் மாவட்ட திமுகவினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பொன்முடி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
திமுக கூட்டணியில் இருந்து பாமகவை வெளியேற்றியதை அனைவரும் வரவேற்கின்றனர். காவல்துறையை ஏவி தேமுதிகவினர் மீதுபொய் வழக்கு போடுவதாக என் மீது குற்றம் சாட்டியுள்ளனர். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்ன வியாபாரம் செய்கிறார் என்று ஊருக்கே தெரியும். அவர்கள் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது அவர்களுக்கே தெரியும்.
நேர்மையாக இருந்தால் ஏன் பயந்து ஓடவேண்டும். காவல் துறை தனது பணியைசெய்கிறது. அவர்களை நாங்கள் கட்டுப்படுத்தவில்லை. காவல்துறை தலையாட்டி பொம்மையாக இல்லை.
விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில், இந்தாண்டே பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படும். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வங்கி கடனுக்கு பதிலாக அரசே பணம் கட்டவேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அவரே பணம் கட்டட்டும். அக்கல்லூரிக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். தமிழகத்தில் 278 கல்லூரிகள் உள்ளன.
கல்லூரியை நிர்வாகம் செய்ய தெரியாதவர்களுக்கு என்ன தெரியும். லாஜிக் இல்லாமல், உளறுபவர்களுக்கு எல்லாம் பதில் தர முடியாது என்றார் பொன்முடி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications