அணு ஒப்பந்தம் கட்டாயம் அமலாகும் - மன்மோகன் சிங் உறுதி

ஜி-8 மாநாட்டுக்காக நேற்று ஏர் இந்தியா ஒன் சிறப்பு விமானத்தில் ஜப்பான் சென்றார் பிரதமர் மன்மோகன் சிங். விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் பிரதமர்.
அப்போது இடதுசாரிகளின் மிரட்டல் குறித்து தான்கவலைப்படவில்ைல என்றும், அணு ஒப்பந்தம் கண்டிப்பாக அமலாகும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
பிரதமர் அளித்த பேட்டியிலிருந்து ...
ஆதரவைத் திரும்பப் பெறுவதாக கூறப்படுவது குறித்து நான் கவலைப்படவில்லை. அதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் அதை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம்.
ஜி-8 மாநாட்டின்போது பல்ேவறு இரு தரப்பு பேச்சுவார்த்ைதகள் இடம் பெறவுள்ளன. இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவது தொடர்பாக சர்வதேச அணு சக்தி ஏஜென்சி மற்றும் என்.எஸ்.ஜி ஆகிய அமைப்புகளில் இடம் பெற்றுள்ள நாடுகளின் உதவியை இந்தியா கோரும்.
இதுதொடர்பாக சர்வதேச அணு சக்தி ஏஜென்சி கவர்னர்கள் போர்டை இந்தியா எப்போது அணுகும் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் விரைவில் அது நடைபெறும். போர்டும் விரைவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம். இதற்கு உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
அதிர்ஷ்டவசமாக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவற்றின் ஆதரவு இந்தியாவுக்கு உள்ளது.
சர்வதேச அணு சக்தி கவுன்சின் ஒப்புதல் கிடைப்பதில் பெரிய சிரமம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதுதான் இப்போது கணிக்க முடியாததாக உள்ளது.
சீனத் தலைவர்களுடனும் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விவாதித்துள்ளோம். இதை சீனா எதிர்க்காது என்றும் உறுதியாக நம்புகிறோம்.
அமெரிக்க அதிபர் புஷ்ஷை சந்திக்கும்போது, ஒப்பந்தத்ைத நிறைவேற்றுவதில் இன்னும் நிறைவேற்றப்படவுள்ள கமிட்மென்ட்கள் குறித்து அவரிடம் எடுத்துச் சொல்வேன். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற நான் கடுமையாக முயற்சித்து வருகிறேன். அதை அமல்படுத்தும் வரை நான் கடுமையாக முயற்சிப்பேன். அரசும் இதில் உறுதியாக உள்ளது என்றார் மன்மோகன் சிங்.
அணு சக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக திட்டவட்டமான, உறுதியான கருத்தை பிரதமர் மன்மோகன் சிங் முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த கருத்தின் மூலம் இடதுசாரிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முற்றிலும் கைவிட முடிவு செய்து விட்டது உறுதியாகியுள்ளது.
--
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications