முலாயம் முடிவில் அதிருப்தி-சமாஜ்வாடி உடைகிறது?
டெல்லி: இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ள நிலையில் சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் நம்பிக்கை வாக்குக்கு எதிராக வாக்ளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முலாயம் சிங்கின் முடிவு தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாக 2 எம்.பிக்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளனர். தங்களைப் போல மேலும் 10 எம்.பிக்கள் அதிருப்தியுடன் இருப்பதாகவும், லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோரப்பட்டால் அதற்கு எதிராக தாங்கள் வாக்களிப்போம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் 12 பேரும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு தாவக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் முக்கியமானவர் ஜெயப்பிரகாஷ். இவர் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர். தனது அதிருப்தி குறித்து ஜெயப்பிரகாஷ் கூறுகையில், 12 எம்.பிக்கள் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளனர். எங்களது கருத்தை அறியாமல் முலாயம் சிங் முடிவெடுத்து அறிவித்து விட்டார்.
இன்று நடந்த நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திலேயே எங்களது அதிருப்தியைத் தெரிவித்தோம் என்றார்.
இவரைப் போலவே முன்னவர் ஹசன் என்ற எம்.பியும் வெளிப்படையாக அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
39 உறுப்பினர்கள் சமாஜ்வாடிக்கு இருந்தாலும் கூட ராஜ்பாப்பர், பேனி பிரசாத் வர்மா ஆகியோர் ஏற்னவே கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டனர். அதிக் அகமது, அப்சல் அன்சாரி ஆகியோர் சிறையில் உள்ளனர்.
தற்போது முன்னவர் ஹசன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் புரட்சிக் குரல் எழுப்பியுள்ளனர். எனவே சமாஜ்வாடியின் உண்மையான பலம் 33 தான் வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால் சமாஜ்வாடி பெரும் சங்கடத்திலும், காங்கிரஸ் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications