தமிழகம் முழுவதும் நாளை பஞ்சாலைகள் ஸ்டிரைக்
கோவை: நசிந்து வரும் பஞ்சாலைகளை காப்பாற்றக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாலை உரிமையாளர்கள் நாளை வேலைநிறுத்த பேராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பஞ்சு விலை உயர்வு, பஞ்சு பற்றாக்குறை, அதிக போக்குவரத்து செலவு, மின் பற்றாக்குறை, வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் பஞ்சாலைகள் நலிந்து வருகிறது. இதனால் அவை கடும் நெருக்கடியில் தவித்து வருகின்றன.
ஆண்டுக்கு சுமார் 1 கோடி பேல் பஞ்சு தமிழகத்திற்கு மட்டும் தேவைப்படுகிறது. ஆனால் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லை. மாறாக 4 லட்சம் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
அதை சமாளிக்க வெளி மாநிலங்களில் வாங்கப்படும் பஞ்சுக்கு, ஒரு கிலோ பஞ்சு ரூ 5 வரை வாடகை, சேவை வரி, மத்திய விற்பனை வரி, போன்றவற்றை செலுத்தி வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் தவிக்கின்றனர்.
தரமான பருத்திகளை வெளிநாட்டு வியாபாரிகள் வாங்கி அதையே அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே பருத்தி ஏற்றுமதியை உடனே நிறுத்த வேண்டும், பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்,சிறப்பு கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும், உள் நாட்டு பஞ்சு கையிருப்பை அதிகப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பஞ்சாலைகள் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
இந்த போராட்டத்தில் சைமா, டாஸ்மா, சிஸ்பா, மதுரை நூற்பாலைகள், அன்னூர் நூற்பாலைகள், இஸ்மா போன்ற பல அமைப்புகள் கலந்து கொள்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications