போலி மார்க் ஷீட்-மாணவிக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

குளித்தலை: அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர போலி மார்க் ஷீட் கொடுத்த மாணவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், சோமரசம் பேட்டையை சேர்ந்தவர் வசந்தி (24).இவர் கரூர் மாவட்டம், மாயனூரில் செயல்படும் அரசு ஆரியர் பயிற்சி பள்ளியில் கடந்த 2001- ம் ஆண்டு சேர்ந்து படித்தார்.

ஆனால் ஆய்வில், இவர் பள்ளியில் சேர கொடுத்த பிளஸ் டூ மார்க் ஷீட் போலியானது என தெரிய வந்தது. ஆனால் அதற்குள் ஆசிரியை பயிற்சி படிப்பை முடித்து விட்டார் வசந்தி.

இதனையடுத்து, போலி மார்க் ஷீட் கொடுத்து பயிற்சியை முடித்து சென்ற வசந்தி மீது ஆசிரியர் பயிற்சி பள்ளி இணை இயக்குனர் தேவராஜ் மாயனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் மாயனூர் போலீசார் வசந்தியை விலைவீசி தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+