ராஜஸ்தான்-வசுந்தராவுக்கு கோவில் கட்டும் ஆதரவாளர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு அவரது ஆதரவாளர் ஒருவர் கோவில் கட்ட திட்டமிட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர்கள் கோவில் கட்டித் தரவுள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராவுக்கு பாஜகவில் தீவிர ஆதரவாளர்கள் உள்ளனர். சமீபத்தில் அவரது தீவிர ரசிகரான போக்ரா என்பவர் துர்க்கை வடிவில் வசுந்தராவை சித்தரித்து போஸ்டர்ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். பாஜகவுக்குள்ளேயே இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அதே போக்ரா மற்றொரு பரபரப்புக்கு வித்திட்டுள்ளார். ஜோத்பூர் மாவட்டம் கெரு என்கிற கிராமத்தில், வசுந்தராவுக்கு கோவில் கட்டப் போகிறாராம் போக்ரா.
இதில் கல்யாணி அம்மனாக வசுந்தராவை சித்தரித்து சிங்கம் மீது அவர் அமர்ந்திருப்பது போல சிலை அமைக்கவுள்ளார். கோவிலை கட்டும் பணிக்காக மதுரையைச் சேர்ந்த கட்டுமான நிபுணர்களை அவர் அமர்த்தியுள்ளார்.
ஏன் இப்படி என்று போக்ராவிடம் கேட்டால், நான் வசுந்தராவை கடவுளாக பார்க்கிறேன். போஸ்டர் அடித்தால்தான் தடுப்பார்கள். ஆனால் கோவில் கட்டுவதை யாரும் தடுக்க முடியாதுஎன்கிறார் போக்ரா.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications