காந்தியின் தமிழ் கையெழுத்தை பாதுகாத்தவர் தீக்குளிப்பு
தாம்பரம்: மகாத்மா காந்தி தமிழில் போட்டுக் கொடுத்த கையெழுத்தை 70 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீத்தாபதி நாயுடு (வயது 84). இவரது மனைவி இறந்து விட்டார். 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இளைய மகன் ஸ்ரீபதி வீட்டில் தங்கி இருந்தார்.
சீத்தாபதி நாயுடுவின் சொந்த ஊர் நாகப்பட்டினம். அங்கு செல்வந்தராக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 1938-ல் பீகாரில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார்.
22.2.1938 அன்று நாகப்பட்டினம் அவுரி திடலுக்கு நிதி திரட்ட வந்த காந்தி அடிகளிடம், அப்போது 13 வயது சிறுவனாக இருந்த சீத்தாபதி நாயுடு தனது தந்தையுடன் சென்று பூகம்ப நிதியாக 5 ரூபாய் வழங்கினார். அவரது உதவும் தன்மையை பாராட்டிய காந்தி அடிகள், ஒரு சிறிய வெள்ளைத்தாளில் காந்தி' என தமிழ் மற்றும் இந்தியில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.
அந்த கையெழுத்தை சீத்தாபதி நாயுடு பொக்கிஷமாக கருதி வெள்ளிப் பேழையில் வைத்துப் பாதுகாத்து வந்தார். பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்து குரோம்பேட்டையில் தங்கிய சீத்தாபதி நாயுடு, காந்தி கையெழுத்து போட்டுக் கொடுத்த பேப்பரை தன் வாழ்நாளுக்கு பின்பும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த மே மாதம் 23-ந்தேதி சென்னை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.
தீக்குளித்து தற்கொலை:
இதற்கிடையே வயது முதிர்ந்த நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்று அவர் அடிக்கடி கூறி வருவாராம்.
இந்தநிலையில் சீத்தாபதி நாயுடு நேற்று மதியம் வீட்டின் காம்பவுண்டு அருகே மண்எண்ணையை உடம்பில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல்கருகிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் நேற்று மாலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
சிட்லப்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications