செம்மொழியாகும் தெலுங்கு-கன்னடம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கன்னடம், தெலுங்கு மொழிகளுக்கும் விரைவில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் தரம்சிங் தலைமையிலான குழு, டெல்லியில் கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது. அப்போது, செம்மொழிக்கான தகுதிகளைப் பெற்றுள்ள கன்னடத்தை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், கன்னடம், தெலுங்கு ஆகியவற்றை செம்மொழியாக அறிவிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள நிபுணர்கள் குழு, தனது ஆய்வை தொடங்கி உள்ளது. இந்த குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இரண்டு மொழிகளும் செம்மொழிகளாக அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதேபோல், பெங்களூர் நகரை பெங்களூரு என்று பெயர் மாற்றுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+