அரசு விளம்பரங்களை நிறுத்தியதை எதிர்த்து தினகரன் வழக்கு
சென்னை: தமிழகத்திலேயே அதிகம் விற்பனையாகும் தங்களது தினகரன் நாளிதழுக்கு அரசு விளம்பரங்களைத் தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சன் நெட்வொர்க் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பொது மேலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விளம்பரங்களை தினகரனுக்கு தருவதை அரசு நிறுத்தி விட்டது.
தமிழகத்திலேயே அதிகம் விற்பனையாகும் நாளிதழ் தினகரன்தான். ஏபிசி அறிக்கைப்படி தினசரி 10 லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது.
ஆனால், தினகரனை விட குறைந்த சர்க்குலேஷன் உள்ள நாளிதழ்களுக்கு அரசு விளம்பரம் தருகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கையாகும். எனவே தினகரனுக்கு தொடர்ந்து தமிழக அரசு விளம்பரங்களைத் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி குலசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசின் செய்தி, விளம்பரத்துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
சமீபத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், மதுரையில் மு.க.அழகிரி தொடங்கியுள்ள ராயல்கேபிள் விஷன் குறித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையை முழு அளவில் வெளியிட்ட தினகரனுக்கு இனிமேல் திமுகவினர் யாரும் விளம்பரம் தரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அரசு விளம்பரங்களை தமிழக அரசு நிறுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications