குடி-தட்டி கேட்ட மனைவி, 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தந்தை!!

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, குடிப்பழக்கத்தை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்து மனைவி மற்றும் இரு குழந்தைகளை எரித்துக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலான்குளம் நடுத்தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ராமதுரை. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மருதையா மகள் முத்துலெட்சுமி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மதுமிதா, ஜெகதீஸ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த ராமதுரைக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது குடித்து வந்தார். இதனால் ராமதுரையின் குடும்பம் வறுமையில் வாடியது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ராமதுரை கடன் வாங்கியும் குடிக்க ஆரம்பித்தார். இதில் அவருக்கு ரூ.70 ஆயிரம் கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் முத்துலெட்சுமியிடம் வந்து பணத்தை திருப்பி கேட்டனர். இதுகுறித்து அவர் தனது கணவர் ராமதுரையிடம் கூறினார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. மாறாக, குடித்து விட்டு வந்து மனைவி-குழந்தைகளை அடித்து உதைத்தார்.

இந்நிலையில் நேற்று சின்னகோவிலான் குளத்தில் உச்சிமா காளியம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. ராமதுரை வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் அடித்தார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த அவரிடம் முத்துலெட்சுமி ஏன் குடித்து அழிக்கிறீர்கள் என சத்தம் போட்டார்.

இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராமதுரை சாப்பிடாமல் வெளியே சென்று படுத்து விட்டார். வீட்டினுள் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகளும் படுத்து தூங்கினர். இரவு 11 மணிக்கு எழுந்த ராமதுரை சமையல் அறைக்கு சென்று மண்ணெணைய் கேனை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு சென்று விட்டார்.

உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் உயிருக்கு போராடி அலறினர். ஆனால் கோயில் திருவிழா நடந்ததால் அவரின் அலறல் சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டிக்குள்ளேயே உடல் கருகி இறந்தனர்.

போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்த ராமதுரை சின்னகோவிலான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். மனைவி, குழந்தைகளை கணவரே எரித்துக் கொன்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிப்பழக்கம் குடும்பத்தையே அழித்துவிட்டது என அப்பகுதி மக்கள் வேதனைப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+