வீடுகளிலும் தம் அடிக்க தடை வருகிறது - அன்புமணி தகவல்
பாட்னா: பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதைப் போல வீடுகளிலும் இனிமேல் புகை பிடிக்க தடை விதிக்கப்படும். மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி முதல் இது அமலுக்கு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்னாவில் நடந்த உலக மக்கள் தொகை தொடர்பான கருத்தரங்கைத் தொடங்கி வைத்த அன்புமணி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சாலைகள், பூங்காக்கள் போன்ற ஓரிரு இடங்களைத் தவிர பொது இடங்களில் பீடி,சிகரெட் புகைக்க இனி தடை விதிக்கபப்டும்.
இதுதவிர தியேட்டர்கள், கிளப்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பொது அலுவலகங்கள், தனியார் கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி முதல் புகை பிடிக்க தடை விதிக்கப்படும்.
இதுதவிர வீடுகளிலும் கூட புகை பிடிக்க தடை விதிக்கப்படும். வீடுகளில் கணவர் புகை பிடித்தால் அதற்கு மனைவிதான் பொறுப்பாவார். எனவே கணவர்கள் புகைபிடிக்காமல் மனைவிமார்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரசு அலுவலங்களில் புகை பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளஇந்தத் தடைக்கும் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள தடை உத்தரவை மீறுவோருக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்ைக எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்றார் அன்புமணி.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications