ஆருஷி: தல்வார் குற்றவாளி அல்ல - சிபிஐ அறிவிப்பு; ஜாமீனில் விடுதலை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆருஷியின் தந்தை டாக்டர் ராஜேஷ் தல்வாருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை, அவர் குற்றவாளி அல்ல என்று சிபிஐ அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.

டெல்லி அருகே நொய்டாவில் 14 வயது சிறுமி ஆருஷியும், அவரது வீட்டு வேலையாளான ஹேமராஜும் 2 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலை தொடர்பாக முதலில் உ.பி. போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஆருஷியின் தந்தை ராஜேஷ்தல்வார் கைது செய்யப்பட்டார். அவருக்கும், அவரது குடும்ப நண்பரான பெண் டாக்டருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், இது ஆருஷிக்குத் தெரிய வந்ததால்தான் அவரை ராஜேஷ் தல்வார் கொலை செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு வந்ததும், ஆருஷி கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. ராஜேஷ் தல்வாரின் கம்பவுன்டரான கிருஷ்ணாவுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக சிபிஐ சந்தேகித்தது. இதையடுத்து அவருக்கு உண்மை கண்டறியும்சோதனை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின்போது மேலும் இருவரும் சிக்கினர். அவர்களில் ராஜ்குமார் என்பவர் டாக்டர் தல்வாரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர். இன்னொருவரான விஜய் மண்டல், தல்வார் குடும்ப நண்பரின் வீட்டு வேலையாள் ஆவார்.

தற்போது 3 பேரும்தான் குற்றவாளிகள் என சிபிஐ அறிவித்து அவர்களைக் கைது செய்துள்ளது. இத்தகவலை சிபிஐ இணை இக்குநர் அருண்குமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அருண்குமார் கூறுகையில், இந்த கொலை வழக்கில் டாக்டர் ராஜேஷ்தல்வாருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்ைல என்று காஸியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டோம். அவருக்கும் இந்தக் குற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்தக் கொலை வழக்கில் கிருஷ்ணாதான் முக்கிய குற்றவாளி. அவரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்டவற்றில் அவர்தான் முக்கிய குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது.

அவர் மட்டுமல்லாது இந்த குற்றத்தில் விஜய் மண்டல், ராஜ்குமார் ஆகியோருக்கும் தொடர்புள்ளது.

இந்த மூன்று பேரும் சம்பவ தினத்தன்று ஹேம்ராஜின் அறைக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ஆருஷியை கற்பழிக்க முயற்சித்தனர். அந்த முயற்சியின்போது ஆருஷி கொல்லப்பட்டு விட்டார். விஷயம் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஹேம்ராஜையும் கொன்று விட்டனர் என்றார்அருண் குமார்.

தல்வார் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று சிபிஐ தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று காஸியாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 50 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் நேற்று தல்வார் விடுதலையானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+