நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு தோற்பது உறுதி: காரத்

செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் காரத் கூறுகையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த வாக்கெடுப்பில் மத்திய அரசு வெல்ல முடியாது.
அரசைத் தோற்கடிப்பதற்காக பல்வேறு கட்சிகளுடன் பேசி வருகிறோம். அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளையும் அணி சேர்க்க முயன்று வருகிறோம்.
எங்களது ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர் ஆட்சியில்நீடிக்கும் தார்மீக உரிமையை அரசு இழந்து விட்டது. நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து விட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்பது உறுதி. மற்றவர்களின் நிீலை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. எங்களது வாக்குகள் நிச்சயம் அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கும்.
பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் கொள்கை அளவில் எந்தப் பெரிய வேறுபாடு இல்லை. காங்கிரஸை விட நாங்கள்தான் பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகிறோம்.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியுடனான பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு சாதகமான எந்த அம்சமும் இல்லை.
சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவுடனான ஒப்பந்தம் பாரபட்சமானது, இந்தியாவுக்கு விரோதமானது.
அணு ஆயுத நாடுஎன்ற வகையில், ஐ.ஏ.இ.ஏ.வுடன் செய்து கொண்ட ஒப்பந்த அம்சங்களை சீனா தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் இந்தியாவால் அப்படி செய்ய முடியாது. காரணம் இந்தியா அணு ஆயுத நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.
இதுபோன்ற பல முக்கிய அம்சங்களை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்காமல் மத்திய அரசு மறைத்து விட்டது. எங்களது முக்கிய எதிர்ப்பே, அமெரிக்காவின் 123 ஒப்பந்தம்தான். இது முற்றிலும் நமக்கு எதிரானது என்றார் காரத்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications