சபாநாயகர் சோம்நாத் விலகத் தேவையல்லை-காங்
டெல்லி: சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்ைல என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், சபாநாயகர் பதவி என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பதவி. எந்தக் கட்சியையும் சேராதவர்கள்தான் இதில் இருக்க முடியும்.
எனவே சோம்நாத் சாட்டர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை. இருப்பினும் இதுகுறித்து சிபிஎம் மற்றும் சோம்நாத் சாட்டர்ஜிதான் முடிவு செய்ய வேண்டும்.
இடதுசாரிகளிடையே குழப்பம்:
இதற்கிடையே, சோம்நாத் சாட்டர்ஜி விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்பதில் இடதுசாரி கட்சிகளிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
சோம்நாத் விலக வேண்டும் என இடதுசாரி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சோம்நாத்துக்கு ஆதரவாக மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் சுபாஷ் சக்கரவர்த்தி குரல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பதில் நாம் பாரதிய ஜனதாவுடன் ஒன்றிணைந்து விடக் கூடாது. அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பது என்பது நமது கட்சியின் முடிவு. இதில் பாரதிய ஜனதா ஆதாயம் தேடி விடுவதைத் தவிர்க்க வேண்டும். சாட்டர்ஜியின் கருத்தில் நான் உடன்படுகிறேன். இதே நிலையை கட்சியிடமும் தெரிவிப்பேன் என சுபாஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
சோம்நாத் அதிருப்தி:
இதற்கிடையே, குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிகள் கொடுத்த ஆதரவு வாபஸ் பட்டியலில் சோம்நாத்தின் பெயரையும் சேர்த்ததற்கு அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அப்படியிருக்கும் போது தன்னை பட்டியலில் சேர்த்தது தவறு என சாட்டர்ஜி அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் ஜோதிபாசுவைச் சந்தித்தபோதும், தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.
பிரகாஷ் காரத், மேற்கு வங்க முதல்வர் பட்டச்சார்யா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சோம்நாத் விலக வேண்டும் என கோரி வருகின்றனர். ஜோதிபாசுவும் விலகுமாறு அறிவுரை கூறியுள்ளார்.
இருப்பினும் இதுவரை இதுதொடர்பாக சோம்நாத் எந்த முடிவையும் எடுக்கவில்லை. மேலும் பதவியிலிருந்து விலகும் முடிவிலும் அவர்இல்ைல என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவர் விலக முடிவு செய்தால், கூடவே எம்.பி. பதவியையும் சேர்த்து ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சோம்நாத் விவகாரத்தில், இடதுசாரி கட்சிகள் பெரும் குழப்ப நிலையில் உள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications