சோனியாவை இன்று சந்திக்கிறார் முகேஷ் அம்பானி
டெல்லி: நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவின் எம்.டி.என் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பாக தம்பி அனில் அம்பானியுடன் கடுமையாக மோதி வரும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார்.
அனில் அம்பானிக்கு சமாஜ்வாடி கட்சி பெரும் ஆதரவாக உள்ளது. இது முகேஷ் அம்பானிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் அனிலை ஆதரிக்கும் சமாஜ்வாடிக்கு பெரும் நெருக்கடிையக் கொடுக்கும் வகையில், சமாஜ்வாடிக் கட்சியையே உடைக்கும் வேலையில் முகேஷ் அம்பானி இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சோனியா காந்தியின் கவனத்திற்கு சமாஜ்வாடி கட்சி கொண்டு சென்றது. முகேஷ் அம்பானி சோனியா காந்தியின் தீவிர ஆதரவாளர் என்பதால் இதில் சோனியா தலையிட வேண்டும் என சமாஜ்வாடி கோரியது.
ஆனால் சோனியா தவறாக நினைத்தாலும் சரி, அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்படும் சமாஜ்வாடிக் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்ற வேகத்தில் முகேஷ் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை முகேஷ் அம்பானி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்தது.
பின்னர் அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகரையும் முகேஷ் சந்தித்துப் பேசினார்.
மாலையில் அவர் சோனியாவை சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் நேற்று முகேஷ் சோனியாவை சந்திக்கவில்லை. மாறாக இன்று சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசுவார் என கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது அம்பானி சகோதரர்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக சோனியா முகேஷுக்கு அறிவுரைகள் கூறக் கூடும் என தெரிகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications